நடத்திய போராட்டங்கள்
· 1982ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்.
· 1983ல் தெலுங்குகங்கை திட்ட ஆய்விற்காக சென்னை முதல் கிருஷ்ணா நதிவரை நடைப்பயணம்.
· 1985ல் இளைஞர்களுக்கான 20 கோரிக்கைகளுடன் தருமபுரி முதல் டில்லி வரை சைக்கிள் பயணம்.
· 1986ல் கன்னியாகுமரி முதல் டில்லிவரை உலக சமாதான ஜோதி தொடர் ஓட்டம்.
· 1987ல் சந்தூர் முதல் மாதேஸ்வரன் மலை வரை மத நல்லிணக்க சைக்கிள் பயணம்.
· 1987ல் இலங்கை தமிழர்களுக்காக 100 இளைஞர்களுடன் சந்தூரில் தீக்குளிப்பு போராட்டம் மற்றும் கைது.
· 1997ல் தொரப்பள்ளி முதல் சென்னைவரை மத நல்லிணக்கத் தொடர் ஓட்டம்.
· 1998ல் நதிகள் இணைப்பிற்காக பருகூர் முதல் தருமபுரி வரை நடைப்பயணம்.
· 1999ல் நதிகள் இணைப்பிற்காக பருகூரில் உண்ணாவிரதம்.
· 2௦௦௦ ல் ஏரிகளை இணைக்கக்கோரி தருமபுரியில் நடைப்பயணமும், உண்ணாவிரதமும்.
· 2002ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி.
· 2004ல் மழைநீர் சேகரிப்பிற்காக பருகூர் தொகுதி முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.
· 2005ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரி முதல் டில்லி வரை மோட்டார் சைக்கில் பிரச்சாரப் பேரணி.
· 2006ல் ஜீவாதாரங்களை பாதுகாக்கக் கோரி பருகூர் முதல் கிருஷ்ணகிரி வரை பிரச்சார நடைப்பயணம்.
· 2௦௦8 ல் சனத்குமார நதியை பாதிக்கும் கிரானைட் குவாரிகளுக்கு எதிராக ஓசூரில் ஆர்ப்பாட்டம்.
· 2௦௦8 ல் நீராதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் வேண்டி சென்னையில் ஆர்ப்பாட்டம்.
· 2008 ல் இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு பத்தாயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் இயக்கம்.
· 2010 ல் நதிகள் இணைப்பிற்கு தொண்டு நிருவனங்களின் ஆதரவு கோரி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.
· 2011ல் திருச்சியில் நதிகள் இணைப்பு மாநில மாநாடு.
· 2014 ல் நதிகள் இணைப்பை வலியுறுத்தி ஓசூர் முதல் சென்னைவரை நடைப்பயணம்.
· 2014 ல் நதிகள் இணைப்பை வலியுறுத்தி சேலத்தில் உண்ணாவிரதம்.
· 2015ல் நதிகள் இணைப்பை வலியுறுத்தி ஆரணியில் பிரச்சாரப் பயணம்.
· 2015 ல் பருகூர் முதல் ராமேஸ்வரம் வரை சலாம் 2 கலாம்
மோட்டார் சைக்கிள் பிரச்சார பேரணி.
· 2017ல் நதிகள் இணைப்பை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பைக் பிரச்சாரப் பேரணி.
· 2021 – 2022 இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி 25,௦௦௦ கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பாரத யாத்திரை.