91 9442866109
Working Hours - Mon - Sat: 8:30AM - 8:30PM

பரிசுகள் / விருதுகள்

பரிசுகள் / விருதுகள்

* தேசிய நடையாளர் (National Walker) என்ற பட்டத்தை சந்தூர் இன்டர் நேஷனல் ஆங்கிலப் பள்ளி இவரின் தேசிய நடைப்பயணத்தை பாராட்டி வழங்கியது. (14.2.1982)

* தேசிய சாதனையாளர் விருதை ஓசூர் அசோக் லைலேண்டு ஓசூரில் நடத்திய நடையாளர்களுக்கான பாராட்டுவிழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.சீனிவாசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.விஜயகுமார் வழங்கினர். (20.7.1982)

* இந்திய துணை குடியரசுத்தலைவர் ஹிதாயத்துல்லா அவர்களின் பாராட்டு சான்றிதழ்.(19.5.1982)

* நடை சாதனையை பாராட்டி மைய அரசின் விளையாட்டுத்துறை யின் மூலம் ரூ.3௦௦௦ பரிசாக வழங்கப்பட்டது.(6.6.1983)

* சிறந்த சமூக சேவகருக்கான “டாக்டர்.ராதாகிருஷ்ணன்” விருதை சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, கலையின் குரல் & மஹா ஃபைன் ஆர்ட்ஸ்ஸின் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.(13.9.2009)

* பாவேந்தர் என்ற பட்டத்தை சென்னை ஜி.கே. திருமண மாளிகையில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்திய தமிழக அரசுக்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் திருமதி. எஸ்.பி.சற்குண பாண்டியன் அவர்களால் வழங்கப்பட்டது. (31.10.2010)

* சிறந்த சமூக சேவகர் (Best Social Worker Award)என்ற விருதினை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற (IndianBoard Of Integrated Medicines) IBIM-ன் மாற்று மருத்துவத்துக்கான மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் எஸ்.ஜெகதீசன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் எஸ்.தமிழ்வாணன் ஆகியோரால் வழங்கப்பட்டது.(15.12.2010)

* Best Social Worker 2012-India Award என்ற விருதினை கோவை, ரத்தினம் பொறியியல் கல்லூரியில் International Development Consultancy And Research Foundation நடத்திய விழாவில் டாக்டர். பால் டைலர் CFYM ஆஸ்திரேலியா மற்றும் டாக்டர். ஆர்.டி.லாரன்ஸ் IDC&RF இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்டது.(15.9.2012)