91 9442866109
Working Hours - Mon - Sat: 8:30AM - 8:30PM

படைப்புகள்

படைப்புகள்

• நான் கண்ட இந்துஸ்தான் இந்த நூல் 420 பக்கங்களை கொண்டது. இந்திய நாட்டின் அன்றைய நிலையை விவரிப்பதாகவும், தேசபக்தியும் தன்னம்பிக்கையும் புகட்டுவதாகவும் அமைந்துள்ளது. உலக அளவில் நாடு முழுவதும் நடந்துக்கொண்டே எழுதிய ஒரே நூல் என்ற தனிச்சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

• கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் என்ற நடைப்பயண அனுபவ கட்டுரை எழுதி குமுதம் வாரஇதழில் தொடராக வெளிவந்தது.

• கிருஷ்ணாவை நோக்கி என்ற நடைப்பயண ஆய்வு கட்டுரை எழுதி குமுதம் வாரஇதழில் தொடராக வெளிவந்தது.

• உலக சமாதான தொடர் ஓட்டம் என்ற உலக அமைதி குறித்த பயணக் கட்டுரை எழுதி தமிழக அரசின் தமிழர் விளையாட்டு மலரில் வெளிவந்தது.

• நாடோடிப் பயணங்கள் என்ற பெயரில், நதிகள் இணைப்பிற்காக மேற்கொண்ட வித்தியாசமான ஆறு பயணங்களின் மாறுபட்ட அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிடப்பட்டது.

• பாரத யாத்திரை என்ற பெயரில், 25,௦௦௦ கிலோமீட்டர் தூரம் தேசம் முழுவதும் ஸ்கூட்டரில் சுற்றி வந்த அனுபவங்களும், தேசத்தின் இன்றைய நிலையும் விவரிக்கும் நூல் தற்போது எழுத்தில் உள்ளது.