இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்
1982ல் இருந்து தன் தாயகத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் இந்திய நாட்டை பலமுறை வளம்வந்தார். வடக்கே வெள்ளத்தாலும், தெற்கே வறட்சியாலும், தேசம் முழுக்க மக்கள் வறுமையினால் அல்லல்படுவதையும், விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வதையும் கண்டு நெஞ்சம் பதறினார். இவற்றுக்கெல்லாம் ஒரே நிரந்தர தீர்வாக தேசத்தில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயம் ஆக்கி, தேசிய நதிகள் இணைப்பின் மூலம் நீர்வழி சாலை திட்டம் இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக தன் அரசுப்பணியை விடுத்து “ இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் “ நிறுவினார். அதற்கான தன் முதல் மனுவை பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் வழங்கினார்.
இதற்காக தேசிய அளவில் பல நூதனப் போராட்டங்களை நடத்தினார். அவ்வேளைகளில் இந்தியப் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, குடியரசுத்தலைவர்கள் அப்துல் கலாம், வெங்கட்ராமன், துணை குடியரசுத்தலைவர் ஹிதாயத்துல்லா, ஆளுநர்கள் . பா.ராமச்சந்திரன், ராம்மோகன்ராவ், மாநில முதல்வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.டி.ராமாராவ், அரசியல் தலைவர்கள் ஜி.கே.மூப்பனார், சோ.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், வைகோ, திருநாவுக்கரசர், குமரிஆனந்தன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், தேசிய நீர் வழிச்சாலை திட்டம் உருவாக்கிய A.C.காமராஜ், உலக சமாதான ஆலய நிறுவனர் மகாமஹரிஷி பரஞ்சோதியார் போன்றோரை சந்தித்து தேசிய நதிகள் இணைப்பு குறித்து பேசினார். அதற்காக இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்.