91 9442866109
Working Hours - Mon - Sat: 8:30AM - 8:30PM

தேசியப் பணியில்

தேசியப் பணியில்

• 1982ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் பத்தாயிரம் கொத்தடிமைகளை கண்டறிந்து அவர்களின் விடுதலைக்கு வித்திட்டார். காஷ்மீர் வானொலியிலும், காஷ்மீர் தூர்தர்ஷனிலும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினார்.

• 1983 ல் சென்னை குடிநீருக்கான தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் துவங்கவிருக்கும் வழியே கிருஷ்ணாநதி வரை நடந்து சென்று தான் கண்டறிந்தவற்றை குமுதம் பத்திரிகையில் தொடராக எழுதினார். அதில் இவர் குறிப்பிட்டதைப் போலவே 10 ஆண்டுகள் கழித்துதான் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்தது.

• 1984 ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த இளைஞர் மாநாட்டில்- கல்வியில் மாற்றம், பள்ளிப்பருவத்திலேயே தொழிற்கல்வி, அனைத்துவகை திருமணங்களும் அரசு பதிவு, கலப்பு மணம் புரிந்தோருக்கு சலுகை, நதிகள் தேசியமயம், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு சுயாட்சி போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

• 1985 உலக இளைஞர் ஆண்டில் தருமபுரி முதல் டில்லி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு, பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களிடம் இளைஞர்களுக்கான 20 கோரிக்கைகளை சமர்பித்தார்.

• 1986 உலக சமாதான ஆண்டில் கன்னியாகுமரி முதல் டில்லி வரை உலக சமாதான தொடர் ஓட்டம் மேற்கொண்டு பாரதப் பிரமர் ராஜீவ்காந்தி அவர்களிடம் சமாதான ஜோதியை வழங்கினார்.

• 1987 ல் பஞ்சாப் மாநிலம் ஜக்ரானில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் இளைஞர்களிடம் தேசிய ஒருமைப்பாடு, சகோதரத்துவம் குறித்து பேசினார். பஞ்சாப்பை சேர்ந்த பல இளைஞர்களை சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத கோஷம் எழும்ப மூலகாரணம் பற்றி “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” என்ற கட்டுரையை எழுதினார்.