வாழ்க்கைக் குறிப்பு
· ஆர்.கே.ஷேக் அமீர், கமுருன் நிஷா தம்பதியினருக்கு மார்ச் 11, 1961ல் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள (அன்றைய சேலம் மாவட்டம்) பருகூர் ஒன்றியத்தில் ஐகுந்தம் புதூர் என்ற கிராமத்தில் ஷேக் சர்தார் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஷேக் சர்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஐகுந்தம் புதூர் தொடக்கப்பள்ளியிலும், எட்டாம் வகுப்புவரை ஐகுந்தம் நடுநிலைப்பள்ளியிலும், பள்ளி இறுதி வகுப்பு வரை சந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், எம்.ஏ.வரலாறு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமும் பயின்றார்.
தேசத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் தன் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் பணியை 11 மே, 1995 ல் ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.