ஷேக் சர்தாரின் சாதனைப் பயணங்களில் சில....
RALLY-1
Walk for National Integration (National Integration year 1982)
1982: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நடைப்பயணம்
தேசிய ஒருமைப்பாடு ஆண்டில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதுவே இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதல் நீண்ட பயணம். பயண அனுபவங்கள் குமுதம் வார இதழில் தொடராக வந்தது. விஜயவாடா அருகே கொத்தடிமைகளாக இருந்த பத்தாயிரம் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
நடை பயணத்தில் சென்னையில் வைகோ (வை.கோபால்சாமி MP), முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஹைதராபாத்தில் NT ராமாராவ், பௌனார் ஆசிரமத்தில் பூமிதான இயக்கத்தின் தந்தை வினோபாஜி, டில்லியில் உதவி ஜனாதிபதி ஹிதாயத்துல்லா, G.K.மூப்பனார், கேரளா கவர்னர் பா.ராமசந்திரன், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரை சந்தித்தனர். இப்பயணத்தின் வெற்றியை பாராட்டி ஓசூர் அசோக் லைலேண்டு விழா எடுத்தது.
RALLY-2
Walk for Krishna River Water
1983: சென்னையிலிருந்து கிருஷ்ணாநதிக்கு நடைப் பயணம்
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியிளிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டத்திற்கான வரைபடம் குறிக்கும் வழித்தடத்தில் சென்னை புழல் ஏரியிலிருந்து ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைவரை நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
நடைப்பயணத்தில் தெலுங்கு கங்கை கால்வாய் வரும் வழியை ஆய்வு செய்து குமுதம் வாரஇதழில் தொடர் கட்டுரை எழுதப்பட்டது. பயணம் முடிந்த பின்பு தமிழக முதல்வர் MGR அவர்களை சந்தித்து, தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக அரசின் பங்கு தொகை இரட்டிப்பாகும், 15 ஆண்டுகள் வரை இதன் மூலம் சென்னைக்கு தண்ணீர் கிடைக்காது, இந்த திட்டத்தால் ஆந்திராதான் பெரிய அளவில் பயன் பெரும், என்ற தகவல்கள் அடங்கிய கோப்பு வழங்கப்பட்டது. இப்பயணத்தை குமுதம் வார இதழ் ஸ்பான்சர் செய்திருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-3
All India Cycling (World Youth Year 1985)
1985: 20-அம்ச கோரிக்கை சைக்கிள் பேரணி (தருமபுரி முதல் டில்லி வரை)
சர்வதேச இளைஞர் ஆண்டில் இந்தியா & இளைஞர் முன்னேற்றத்திற்காக-
* அனைத்து நதிகளையும் தேசியமயம் ஆக்க வேண்டும்.
* அனைத்து வகை திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
* அடிப்படை கல்வியை மாற்ற வேண்டும்.
* சாதி, மத பெயர்களை கல்வி சான்றிதழ்களில் இருந்து நீக்க வேண்டும்.
* அனைத்து சாதி மத சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்.
* சாதி மத விழாக்களில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதை தடை செய்ய வேண்டும். போன்ற 20 கோரிக்கைகள் வலியுறுத்தி தருமபுரியிலிருந்து டில்லி வரை சைக்கிள் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
![]() |
அப்போது சென்னையில் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களிடமும், ஹைதராபாத்தில் ஆந்திர மாநில முதல்வர் NT ராமாராவ் அவர்களிடமும் டில்லியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களிடமும் 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் சமர்பிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-4
World Peace Marathon Rally (World peace Year 1986)
1986: உலகக் சமாதான தொடர் ஓட்டம் [ கன்னியாகுமரி முதல் டில்லி வரை ]
உலக சமாதான ஆண்டில் பல நாடுகளில் உலக சமாதான தொடர் ஓட்டங்கள் நடைப்பெற்றன. இந்தியாவில் உலக சமாதானத்தை வலியுறுத்தி 16 பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து சமாதான ஜோதியை ஏந்திக்கொண்டு டில்லியை நோக்கி ஓடினார்கள். இரவு பகல் பாராமல் கடும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் தொடர்ந்து ஓடி 15 நாட்களில் டில்லியை அடைந்தனர்.
![]() |
டில்லியில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களிடம் தொடர் ஓட்டமாக கொண்டு சென்ற உலக சமாதான ஜோதியை சமர்ப்பித்தார்கள். தமிழக அரசு விளையாட்டுத் துறையின் தமிழர் விளையாட்டு மாத இதழில் இப்பயண அனுபவங்கள் கட்டுரையாக வெளிவந்தது. இப்பயணத்தை ஓசூர் அசோக் லைலேண்டு ஸ்பான்சர் செய்திருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-5
Walk for Indian Rivers Inter-Linking
1998: பருகூர் to தருமபுரி நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடைப்பயணம்
கங்கை காவிரி நதிகள் இணைப்பை வலியுறுத்தி பருகூரில் இருந்து தருமபுரி வரை நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பிரச்சார நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
பர்கூரிலிருந்து கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், காரிமங்கலம் வழியாக தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் அடைந்து, மாவட்ட ஆட்சியர் மோகன் பியாரே அவர்களிடம் கங்கை காவிரி நதிகள் இணைப்பிற்கான கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இந்த கோரிக்கை மனுவின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-6
Walk for River Water
2000: ஏரிகளை இணைக்கக் கோரி நடைபயணம் & உண்ணாவிரதம்
மார்கண்டேய நதியுடன் இணைந்திருக்கும் கிருஷ்ணகிரி பெரிய ஏரியுடன் பருகூர் தொகுதியிலுள்ள ஏரிகளை இணைக்கக்கோரி, 1௦ பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாயிகள், ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் என 5,000 க்கும் மேற்பட்டோர் தருமபுரி நகரிலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை நடைப்பயணம் மேற்கொண்டனர்.
![]() |
தருமபுரி ஆட்சியரகம் எதிரில் சாலையின் இருமருங்கிலும் பந்தல்கள் போடப்பட்டு அனைவரும் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அன்று மாலையில் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான கோரிக்கை மனு சமர்பிக்கப்பட்டது. இதன் பலனாக ஏரிகள் இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணி நிறைவு பெற்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-7
London to Paris Cycling for Indian Rivers Inter-Linking
2002: லண்டன் to பாரீஸ் சைக்கிள் பேரணி ்
இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை முதல் சென்னை பாரீஸ் கார்னர் வரை சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. வழி நெடுகிலும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்த வண்ணம், ஒலிபெருக்கி மூலம் இந்திய நதிகள் இணைப்பிற்கான விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
![]() |
வழியில் வாலாஜா அசேன் MLA, பூந்தமல்லி ஆனந்தகிருஷ்ணா MLA, நடிகர் சத்தியராஜ், ஜி.கே.வாசன், காங்கிரஸ் தமிழ்மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் சைக்கில் பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
சைக்கிள் பேரணியினர் சென்னையில் கவர்னர் மாளிகையை அடைந்து, தமிழக ஆளுநர் ராம் மோகன்ராவ் அவர்களிடம் இந்திய நதிகள் இணைப்பு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-8
All India Bike Rally for Indian Rivers Inter-Linking
2005: அகில இந்திய மோட்டார் சைக்கிள் பிரச்சார பயணம்
இந்திய நதிகள் இணைப்பை வலியுறுத்தி கிருஷ்ணகிரி இலிருந்து டில்லி வரை மோட்டார் சைக்கிள் பிரச்சார பயணம் நடத்தப்பட்டது. இப்பயணத்தில் பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்துக் கொண்டனர். பயணத்தில் வழி நெடுகிலும் அந்தந்த மாநில மொழிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
![]() |
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து பைக் பிரசாரக் குழுவினர் டில்லியை அடைந்து, இந்தியக் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அய்யாவை சந்தித்து இந்திய நதிகள் இணைப்பு குறித்த மனுவினை சமர்பித்தார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-9
Walk for saving Water Resources
2006: ஜீவாதாரப் பாதுகாப்பு பிரசார நடைப்பயணம்
பருகூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம் வரை 1,௦௦௦ க்கும் மேற்பட்ட மகளீர் மற்றும் இந்திய நதிகள் இணைப்பு இயக்க உறுப்பினர்களும், சில தொண்டுநிறுவனங்களும் இணைந்து வாழ்வாதாரத்திற்கு தேவையான நீராதாரங்களை பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு பிரசார பாதயாத்திரை நடத்தப்பட்டது.
![]() |
முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட நீராதாரங்களை பாதுகாக்க கிருஷ்ணகிரி பெரிய ஏரி இணைப்பு கால்வாய் பணியை துரிதப்படுதுதல், தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடுதல், வரும் 5 ஆண்டுகளுக்கு ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதித்தல், ஆறுகளின் குறுக்கே 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டுதல், கிராமத்திற்கு ஒரு குளம் வெட்டுதல், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல் போன்ற 15 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பாதாயாத்திரை குழுவினரின் சார்பாக வழங்கப்பட்டது. இப் பயணத்தை நாமக்கல் கங்கா மெடிகல் பவுண்டேஷன் ஸ்பான்சர் செய்திருந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-10
Walk for Indian Rivers Inter-Linking
1998: பருகூர் to தருமபுரி நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடைப்பயணம்
1) இந்திய நதிகளை இணைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
2) நீராதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
3) விவசாயம் சார்ந்த அரசு துறைகளில் விவசாய குடும்பத்தினரையே நியமிக்க வேண்டும்.
4) விவசாயத்திற்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடனை வழங்க வேண்டும்.
5) அரசுப் பணிகளில் விவசாயிகளுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும்.
6) மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகள், அணைகள், ஏரிகள், குளங்களை சுத்தம் செய்தும், தூறேடுத்தும் பாதுகாக்க வேண்டும்.
7) நதிநீர் பாசனக் கால்வாய்களுடன் அனைத்து ஏரிகளையும் இணைக்க வேண்டும்.
![]() |
&) தமிழகம் முழுவதும் மணல் எடுப்பதை 5 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும்.
9) விளைநிலங்களில் பிளாட்டுகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
10) பிளாட்டுகள் போட்டு பல ஆண்டுகளாய் வெறுமனே உள்ள விவசாய நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் விவசாயத்திற்கு உட்படுத்த வேண்டும்.
11) நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
12) அனைத்து நதிகளிலும் 5 கி.மீ. க்கு ஒரு தடுப்பணை வீதம் கட்ட வேண்டும்.
13) குடிநீர் தனியார்மயம் ஆகிவருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14) நாட்டில் முன்மாதிரியாக விவசாயத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
15) தஞ்சை மண்ணில் மீத்தேன் வாயு எடுப்பதை தடை செய்ய வேண்டும்.
போன்ற 15 கோரிக்கைகளுடன் ஓசூரில் இருந்து சென்னைவரை நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-11
Salaam 2 Kalam Bike Rally
2015: சலாம் 2 கலாம் மோட்டார் சைக்கிள் பிரச்சாரப் பயணம்:
அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பருகூர் முதல் இராமேஸ்வரம் வரை பைக் பிரசார பயணம் {கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக} நடத்தப்பட்டது.
1) Dr.கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் எழுச்சிதினமாக அறிவிக்க வேண்டும்.
2) Dr.கலாம் நினைவிடம் உலகத் தரத்தில் நினைவுச்சின்னமாக அமைக்க வேண்டும்.
![]() |
3) டில்லியில் Dr.கலாம் வாழ்ந்த வீட்டை அறிவுசார் மையமாக அமைக்க வேண்டும்.
4) டில்லி ராஜபாட்டையில் Dr.கலாமிற்கு சிலை அமைக்க வேண்டும்.
5) Dr.கலாம் எழுதிய நூல்களை தேசிய உடமையாக்க வேண்டும்.
6) Dr.கலாமின் பெயரில் தேசிய விருது நிறுவ வேண்டும்.
7) டில்லி to இராமேஸ்வரம் Dr.கலாம் பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
8) மெட்ராஸ் பல்கலைக் கழகத்திற்கு Dr.கலாம் பெயரை சூட்ட வேண்டும்.
9) கலாமின் சாதனைகள், வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும்.
10) Dr.கலாமின் கனவான தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
போன்ற 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி இராமேஸ்வரம் சென்ற பைக் பிரசாரக் குழுவினர் இக்கோரிக்கைகள் அடங்கிய நினைவு மடல்களை கலாம் அய்யாவின் மூத்த சகோதரர் மற்றும் Dr.கலாம் அவர்களின் ஆலோசகர் Dr.பொன்ராஜ் அய்யா ஆகியோரிடம் வழங்கினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RALLY-12
All India Scooter Rally for National Integration
2021-2022: இந்திய ஒற்றுமைக்காக அகில இந்திய ஸ்கூட்டர் பயணம்:
![]() |
இந்திய ஒற்றுமைக்காக 25,௦௦௦ கிலோமீட்டர் இந்தியா முழுவதும் ஸ்கூட்டரில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயண அனுபவங்கள் “பாரத யாத்திரை” என்ற பெயரில் புத்தகமாக வெளிவர உள்ளது. இந்நூல் இந்தியாவின் இன்றைய நிலையை விளக்கமாகவும் நேரில் கண்ட சாட்சியாகவும் விவரிக்கும் ஒரு வரலாற்று பொக்கிஷமாக இருக்கும். இப்பெரும் பயணத்தை ஓசூர் TVS நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.
![]() |
![]() |